ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று காலை இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த இராணுவ அதிகாரியைப் படுகொலை செய்த 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாகத் தேடிவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.