ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 31ஆம் தேதி முதல் இம்மாதம் 17ஆம் தேதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
39 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதேவேளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்த வருடம் இரண்டு இலட்சத்து இருபத்து இருபத்தைந்தாயிரம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும்
13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.