கொங்கோ குடியரசில் எம்பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மைத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15, 664 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக மத ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.