உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மக்கள் முன்பாக வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தமது அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச கத்தோலிக்க சமூத்திடம் வாக்குறுதியளித்துள்ளார்.
கொழும்பு ஆயர் இல்லத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மர்மங்களை மக்கள் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் உண்மைத் தன்மை வெளிகொணரப்படும்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை வெளிக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராக உள்ளது. இதற்கான தெளிவான வேலை திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகமுறையான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு இடம்பெறவில்லை. இந்த நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் முறையான விசாரணையை எதிர்பார்த்திருக்கின்றனர்.
இதன் உண்மைத்தன்மை கர்தினல் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவைக்கு தெளிவுபடுத்துவோம்
இதன் பிரதான சூத்திர தாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.