ஜனாதிபதி தேர்தல் என்பது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
ஜோர்ஜியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே கமலா ஹாரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே போல் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது இரு வேட்பாளர்களும் தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் நாம் கடுமையான பணிகளைச் செய்ய வேண்டியுள்ளதுடன், கடுமையான போராட்டங்கள் தனக்குப் பழக்கப்பட்டவை என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கறிஞராக இருந்தபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடியிருக்கிறேன் என்றும் அந்த போராட்டங்கள் எதுவும் எளிதாக இருந்ததில்லை.
அதே போல் தேர்தல் போராட்டமும் எளிதானது அல்ல. இது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் என கமலா ஹாரிஸ் மேலும் தெரிவித்தார்.