முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த நிலையில் அங்குள்ள சான்பிரான்ஸ் சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ், ஹெல்த்கேர் மற்றும் அப்ளைட மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன், இந்திய மதிப்பில் 900 கோடி ரூபா முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் இந்திய மதிப்பீட்டில் 400 கோடியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை, சென்பிரான்சிஸ்கோ நகரில் 5 நாட்கள் தங்கி இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிகாகோ நகரம் செல்லவுள்ளதாகவும் , அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.