தென்கொரியாவில் உற்பத்தித் துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்ற 107 இளைஞர்கள் தென்கொரியாவுக்குச் சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி நிறுவகத்திற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இந்த குழுவினர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2024 ஜனவரி முதல் தற்போது வரையான 8 மாதங்களில் 83 பெண்கள் உட்பட 4,368 இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது