“இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புத்தளம், மதுரங்குளி கடையாமோட்டையில் நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ”கல்வி, சுகாதாரம், விளையாட்டு உட்பட சுற்றுலாத்துறையையும் மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நாட்டை வளப்படுத்தவும் தாம் முயற்சி செய்து வருவதாகவும்” நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் அபிவிருத்தியை செய்வதுடன், சுற்றுலா பயணிகளின் வருகையால் இங்குள்ள முதல்தர மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், வியாபாரிகள் என அனைவரும் சிறந்தொரு வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் திட்டங்களை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்த தாம் தீர்மானித்துள்ளதாகவும்” நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.