”அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும், தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாண்டு பல நிவாரணங்களை தாம் வழங்கியுள்ளதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நாட்டில் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது எனவும், எதிர்காலத்தில் ரூபாய் மேலும் பலமடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.