60,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டில் இரண்டு வருமான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.