டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் 29 பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
வருடத்தில் நாட்டில் 36,642 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தில் டெங்கு நோயினால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.