2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு மெக்கல்லம் வந்த பின்னர் ‘பேஸ்பால்’ என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.
அண்மையில் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகினார்.
இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரென்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.