சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டுக்கு பாதகமானவை அல்ல எனவும் அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.