கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக எலக்ட்ரோனிக் கடவுச்சீட்டு வழங்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ள மக்கள் வரிசையில் நிற்கும் நிலமை ஏற்பட்டமைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையே பொறுப்புக் கூற வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.