கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய பொருளாதாரத்தில் சீனா தீங்கு விளைவிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்” சீனாவில் இருந்து குடைகள், இசைக் கருவிகள் போன்ற பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறித்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்திய பொருளாதாரம், சீனாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.