இந்தியாவில் இருந்து அரசியல் கருத்துகளை சேக் ஹசீனா கூறுவது நட்புறவை பாதிக்கும் செயல் என்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக யூனுஸ், டாக்காவில் அளித்த பேட்டியில் , பங்காளதேஷ் இந்தியாவுடன் வலுவான உறவுகளை மதிக்கிறது. ஹசீனாவின் நிலைப்பாட்டில் யாரும் திருப்தி இல்லை, ஏனென்றால் அவர் பேசுவது பிரச்சனையாக இருக்கிறது. அவர் அமைதியாக இருந்திருந்தால், நாங்கள் மறந்திருப்போம்; மக்களும் மறந்து இருப்பார்கள். ஆனால் அவர் இந்தியாவில் அமர்ந்து கொண்டு பேசுகிறார், இது யாருக்கும் பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது எங்களுக்கும் இந்தியாவுக்கும் நல்லதல்ல. இது அசௌகரியமாக உள்ளது. மக்கள் எழுச்சி மற்றும் மக்களின் கோபத்தைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட்டார். அட்டூழியங்களுக்கு எதிராக பங்களாதேஷ் மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அதற்காக அவர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என கூறினார்.
அவரை திரும்ப அழைத்து வர வேண்டும், இல்லையெனில் பங்களாதேஷ் மக்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். அவர் செய்த அட்டூழியங்கள், இங்குள்ள அனைவர் முன்னிலையிலும் விசாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.