மியன்மாரில் உள்ள இணைய குற்றச் செயல் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பேரடங்கிய இலங்கையர்கள் குழுவொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
நேற்று இரவு நாட்டை வந்தடைந்த இந்தக் குழுவில், 16 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான முகவர் நிறுவனம் தலையிட்டிருந்தது.
இவர்கள் மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் தகவல்களை பதிவு செய்துக்கொண்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.