பப்புவா நியூ கினியாவில் சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கமொன்று தொடர்பாக இரண்டு பழங்குடி குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் , குறித்த பகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையாளர் டேவிட் மன்னிங் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் குறித்த பகுதியில் மதுபான விற்பனைக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேர ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.