இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான கமிந்து மெண்டிஸ், உலக டெஸ்ட் கிரிக்கெட் சாதனையொன்றை சமன் செய்துள்ளார்.
தற்போது காலியில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, பாகிஸ்தான் அணியின் வீரரான சவுத் ஷகீலின் சாதனையை கமிந்து சமன் செய்துள்ளார்.
சவுத் ஷகீல், தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 50 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்று சாதனைப் படைத்திருந்தார்.
இந்நிலையில் கமிந்து மெண்டிஸ் தமது 04 ஆவது டெஸ்ட் சதத்தைப்பெற்ற நிலையில், அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.