தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் விளம்பர நடவடிக்கைகளில் தனியார் நிறுவனமொன்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் அரசாங்கத்திற்கு 64 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.