”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய கடவுச்சீட்டுக்கான வரிசைகள் நாட்டில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாகவும், அதனை விரைவில் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அமைச்சர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.