“ஒக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டாக்கா டெஸ்ட் போட்டியே தனக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்று” பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான கான்பூர் டெஸ்டுக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இந்த ஆண்டு உலகக் ஜூன் மாதம் தனது கடைசி டி20 போட்டியில் ஏற்கனவே விளையாடியதையும் அவர் இதன்போது நினைவுபடுத்தினார்.
எனினும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் தொடர்ந்தும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் இன்னும் தற்காலிகமாக உள்ளது, இந்த வார தொடக்கத்தில் மைதானத்தை ஆய்வு செய்த பின்னர் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் இன்னும் பாதுகாப்பு அனுமதியை வழங்கவில்லை.
பங்களாதேஷில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த அமைதியின்மையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஷாகிப், அவாமி லீக் தலைமையிலான அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், அவருக்கு எதிராக எதிர்ப்புகள் இருந்தன.
ஓகஸ்ட் 5 ஆம் திகதி அவாமி லீக் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததிலிருந்து, ஷாகிப் சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.