”சில மணிநேரங்களில் லெபனானில் போர்நிறுத்தத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்” என்று வெளியான அறிக்கையினை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம்,”இந்த தகவல் தவறானவை என்றும் முழு பலத்துடன் லெபனானில் தொடர்ந்து போரிடுமாறு இஸ்ரேலிய இராணுவத்திடம் பிரதமர் கூறியதாகவும் ”குறிப்பிட்டது.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முன்வைத்த போர்நிறுத்த முன்மொழிவுக்கு நெதன்யாகு பதிலளிக்கவில்லை என்று அவரது அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர், ”வடக்கில் போர் நிறுத்தம் இருக்காது, இஸ்ரேலின் வெற்றி மற்றும் வடக்கில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பும் வரை எங்கள் முழு பலத்துடன் ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக தொடர்ந்து போராடும்” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.