அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 295.80 ரூபாவாகவும், 304.91 ரூபாவாகவும் காணப்படுகிறது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.