நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளடதுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் காத்மாண்டுவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கை மூழ்கடித்த இரண்டு நாட்கள் கடுமையான மழைக்குப் பின்னர் நேற்று 50 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை இதுவரை 3,600 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணிகள் விமானங்கள் மற்றும் படகுகளில் தொடர்கின்றனது
மேலும் காத்மாண்டுவை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பெரும்பாலான முக்கிய நெடுஞ்சாலைகள் மண்சரிவுகளால் புதையுண்டு போயுள்ள என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது