நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்களை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், எரிபொருள் வசதிகள் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் என்பன இழக்கப்படும்.
ஆனால், மடிவேல கவுன்சிலர் குடியிருப்பு வளாகத்தில் வழங்கப்பட்டிருந்த குடியிருப்புகளை மட்டுமே தேர்தல் நடைபெறும் நாள் வரை பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுளது