காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி – 05 பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தரம் 11 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் காத்தான்குடி- 05, அஹமட் பரீட் மாவத்தை வீதி வழியாக பயணித்த போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பம் ஒன்றுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.