அவிசாவளை பிரதான வீதியின் கொட்டபொல தண்டவாளத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது
இதில் எட்டு பேர் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இரத்தினபுரியில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதுடன், சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.