வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
புதிதாக நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது.
அதற்கிணங்க, குறித்த நபர்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைவாக குறித்த அறிக்கை தற்போது வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை கிடைத்ததும் வெளியுறவுத்துறை அமைச்சர், நியமனங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.