கலால் ஆணையர் ஜெனரல் எம். ஜே. .குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நிதியமைச்சராக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை குணசிறி ஒப்பந்த அடிப்படையில் கலால் ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்ததுடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் யு.டி.என்.ஜெயவீரவை அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது














