நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் என்பது கலைமகளை வழிபடுவதற்குரிய நாட்களாகும்.
ஞானம், கல்வி, கலைகள், பேச்சு ஆகியவற்றில் அதிக ஆற்றலை பெற்று, தேர்ச்சி பெறுவதற்கு கலைமகளின் அருள் நிச்சயம் தேவை.
ஒருவர் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், சவால்கள் ஆகியவற்றை சமாளித்து, தொடர் வெற்றிகள், முன்னேற்றம் ஆகியவற்றை பெற வேண்டும் என்றால் அதற்கு சரஸ்வதி தேவியின் அருள் நிச்சயம் தேவை.
அப்படி நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை விலக செய்யும் நாட்கள் என்பதால் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு நவராத்திரியின் 7 ஆம் நாளான மகா சப்தமி ஒக்டோபர் 10 ஆம் திகதி புதன்கிழமை வருகிறது.
இது சரஸ்வதி தேவியை வழிபட துவங்குவதன் முதல் நாளாகும்.
இந்த ஆண்டு நவராத்திரியின் 7 ஆம் நாள், மூலம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது இன்னும் சிறப்பானதாகும்.
மூலம் நட்சத்திரம் என்பது கலைமகளாகிய சரஸ்வதி தேவி அவதரித்த நட்சத்திரம் ஆகும்.
தேவி அவதரித்த நட்சத்திரத்திலேயே தேவிக்கு வழிபாட்டின் ஆரம்ப நாள் வருவது இன்னும் விசேடமானதாகும்.
இது கலைமகளின் அருளை முழுமையாக பெறுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.