நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.58 ரூபாவாகவும், 297.62 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.96 ரூபாவாகவும், 298.03 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நிணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.