எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதுடன் தேசியப்பட்டியல் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பகிறது.
நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.