களனி பள்ளத்தாக்கின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 48 மணி நேரத்தில் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவு முழுவதும் இன்று பெய்துவரும் மழையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.