பெபிலியான பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டருந்த காவலாளியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்பட்ட 12 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்லத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவர்கள் 80 வயது மதிக்கத் தக்க காவலாளியை சிறுவர் இல்லத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.