மழை காரணமாக இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கண்டி, பல்லேகலயில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 38.3 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால், ஆட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 74 ஓட்டங்களுடனும், ரோஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வர்னிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் அணித் தலைவர் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.