நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்தை பிரதான கட்சிகள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் மாவட்ட இளைஞர் சமூகத்தினரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி நாங்கள் பதுளை மாவட்ட இளைஞர்களை சந்தித்தோம். அந்த விவாதத்தில் ஒரு முக்கியமான விஷயம் பேசினோம். பதுளை மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளோம். எமது தமிழ் மக்களின் வாக்குகளை திருடுபவர்களுக்கு எதிராக செயற்படுவதுடன், தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாநகர சபை தேர்தல்களை எமது கட்சி எவ்வாறு எதிர்கொள்ளும்? மாகாணங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் நாடாளுமன்றத்திற்கு மட்டும் அல்ல. இந்த வாக்கெடுப்பில் எமது பிரதிநிதி தெரிவு செய்யப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் தோல்வியடையும் என்பதை நாம் அறிவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்