அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், முக்கிய தேர்தல் மாநிலங்களில் கடுமையான பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (20) பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் ஒரு புதிய யுக்தியை கையாண்டார்.
அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஹாரிஸ் ஜோர்ஜியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை பென்சில்வேனியாவில் அமைந்துள்ள துரித உணவு உற்பத்தி நிறுனமான மெக்டொனால்டுக்கு சென்று, பிரெஞ்சு பொரியல்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றினார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையை செய்தியாளர்களும் உணவகத்தின் உதவியாளர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோது,
78 வயதான அவர், தனது சூட் ஜாக்கெட்டைக் கழற்றி, கருப்பு மற்றும் மஞ்சள் நிற சமையல் உடையினை அணிந்து, பிரஞ்சு பொரியல்களை சமைத்தார்.
ஒரு ஊழியர் ட்ரம்பிற்கு எண்ணெயில் பொரியல்களை எப்படிக் கொட்டுவது, பொரியல்களை உப்பு செய்வது மற்றும் ஒரு ஸ்கூப்பைப் பயன்படுத்தி பெட்டிகளில் வைப்பது எப்படி என்று ட்ரம்பிற்குக் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குடியரசுக் கட்சி வேட்பாளர் இது “என் வாழ்நாள் முழுவதும் செய்ய விரும்பிய ஒன்று” என்று கேலியாக சொன்னார்.
தற்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், 1980 களில் கலிபோர்னியாவில் தனது கல்லூரிப் பருவத்தில் மெக்டொனால்டின் துரித உணவுச் சங்கிலியில் பணிபுரிந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஹாரிஸ் ஒருபோதும் மெக்டொனால்டில் பணியாற்றவில்லை என்று ட்ரம்ப் பலமுறை கூறி வருகிறார்.
இந்த நிலையில் ட்ரம்பின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இதன் பின்னர், ட்ரம்ப் ரைவ்-த்ரூ ஜன்னல் வழியாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.