“ஐக்கிய ஜனநாயகக் குரல்(United Democratic Voice) எனும் தமது கட்சியிலிருந்து இம்முறை 10 பேரையாவது மக்கள் நாடாளுமன்றுக்கு அனுப்புவார்கள்” என தான் உறுதியாக நம்புவதாக அக்கட்சியின் களுத்துரை மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள தனியார் ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் எமது கட்சியிலிருந்து இம்முறை 10 பேரையாவது மக்கள் நாடாளுமன்றுக்கு அனுப்புவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
எமது கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உள்ளாக்கப்படாதவர்கள் என்பதோடு, நாட்டுக்காக சேவையாற்ற தயாரானவர்கள் என்பதையும் இங்கே கூற வேண்டும்.
எம் மீது நம்பிக்கை வைத்ததுபோல, எம் கட்சி மீதும் நம்பிக்கை வைத்து, அதிகளவிலான உறுப்பினர்களை நாடாளுமன்றுக்கு மக்கள் அனுப்ப வேண்டும்” இவ்வாறு திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.