“கள்வர்களையும் மோசடியாளர்களையும் கைது செய்யும் செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்” என்று ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, உறுதியளித்ததைப் போன்றே திருடர்களை தற்போது பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இன்று பலர் உள்ளே சென்றுவிட்டார்கள். இந்த செயற்பாட்டை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
நானும் திருடர்களைப் பிடிக்கத்தான் கடந்த காலங்களில் போராடினேன். எனினும், இறுதியில் நான்தான் சிறைக்கே சென்றேன். நான் ரெக்கோடிங்களுக்கு பயந்தவன் கிடையாது. எனது ஒரு ரெக்கோடிங்கில் கூட, நான் லஞ்சம், கப்பம் கோரியதாகவோ, சிறையில் இருக்கும் திருடர்களையோ கொலைக் காரர்களையோ வெளியியே விட வேண்டும் என்று நான் கூறவில்லை.
மாறாக, திருடர்களை பிடிப்போம், அவர்களை பிணையில் விடுவிக்கக்ககூடாது என்றே நான் பேசியிருப்பேன். என்னிடம் ஒழிவு மறைவுக் கிடையாது. நேர்மையாக இருந்தால் எதற்காக அஞ்ச வேண்டும்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.