”மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் தாம் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசாங்கத்திற்கு நாட்டை வழிநடத்த, பலமானதொரு எதிர்க்கட்சி அவசியமாகியுள்ளது.
அதிகமான அதிகாரம் மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால், நாம் பிரபலமான எதிர்க்கட்சியாகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம். மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் நாம் ஒருபோதும் ஈடுபட மாட்டோம் என்று இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.