பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கான திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை அறிவிக்குமாறு கோரினார்.
தமக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, மேல்முறையீட்டு மனுவை அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதேவேளை 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் அமைந்ததாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை விசாரித்த ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது