தாம் யாரோடு கூட்டணி அமைக்கப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேனியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள சீமான், விஜய்யின் அரசியல் வருகையால் தனக்கு வரும் வாக்குகள் குறைவடையாது எனவும், விஜய்யின் ரசிகர்களும் தனக்கே வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது ரசிகர்களை சம்பாதித்த பின்னரே அரசியலுக்கு வந்தனர் எனவும், தான் மக்களை சம்பாதித்த பின்னரே அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு நடிகரைப் பார்ப்பதற்காக அதிகளவான கூட்டம் வரும் எனவும், ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அந்த நடிகருக்கே வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் எனத் தெரிவித்திருப்பது விஜய்யின் பெருந்தன்மை எனவும், அதனை ஏற்று அவருடன் கூட்டணியில் இணைவது அவரவர் விருப்பம் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை எனவும், தேர்தலில் தனித்தே போட்டியிடப் புாவதாகவும் தெரிவித்துள்ளார்.