காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் அலுவலகப் பணியாளர்களில் 50% பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
மேலும் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் லாகூர், உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது