உலகளவில் பெரும் எதிர்ப் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில்,முன்கூட்டியே 6.8 கோடி பேர் வாக்களித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி வானிலை, மருத்துவம், வெளியூர் பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை முன்கூட்டியே செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது தபால் வாக்குகள் மட்டுமல்லாமல் தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்த முடியும் எனத் தெரிக்கப்படுகின்றது.
அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 24 கோடி பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், இதில் கிட்டத்தட்ட 25% அதாவது 6.8 கோடி பேர் முன்கூட்டியே தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கும் பலத்த போட்டி நிலவி வருகின்ற நிலையில் 6.8 கோடி பேர் முன்கூட்டியே தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.