நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார்.
உடபுஸ்ஸல்லாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நல்ல காலம் பிறந்து விட்டது. நாம் இது வரைகாலமும் எதிர்நோக்கி வந்த பிரச்சனைக்கு தீர்வாக தற்போது ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி வந்து விட்டது . இக்கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க ஒரு சிறந்த தலைவர். இன்று இந்த நிகழ்வுக்கு வருகை தந்துள்ள மக்கள் பணத்திற்காக வரவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வருகை தந்துள்ளனர். இது வரை காலமும் எந்த அரசியல் வாதிகளும் வருகை தராத உடபுஸ்ஸல்லாவை மண்ணுக்கு எமது தலைவர் ரஞ்சன் ராமநாயக்க வந்துள்ளார்.
நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்கள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவுடன் முதல் வீட்டுத் திட்டத்தை உடபுஸ்ஸல்லாவை மண்ணிலேயே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
எனவே எமது மக்கள் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சிக்கு ஆதரவு தருவார்கள் என நாம் உறுதியாக நம்புகின்றோம்” இவ்வாறு சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார்.