பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் புகையிரதத் திணைக்களம் என்பன அறிவித்துள்ளன.