நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வவுனியாவில் காலை10 மணிவரையான காலப் பகுதியில் 25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
அத்துடன் முல்லைத்தீவில் 22.74 வீதமான வாக்குகளும், மன்னாரில்18.5 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அந்தவகையில் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல்மாவட்டத்தில் காலை 10மணிவரை 22 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் தமது ஜனநாயக கடமையினை ஆற்றிவருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.