ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பானது நான்காவது நாளாகவும் இன்று (22) தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19 ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.
எவ்வாறெனினும், அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஒன்றியம் மற்றும் மேற்படி பிரச்சினையின் மாணவர்களின் கூட்டுக் குழுவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, பல்கலைக்கழக துணைவேந்தரை அப்பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கும் வரை தனது தொழில் நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த குறிப்பிட்டார்.
இதேவேளை, ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை கல்வி அமைச்சுக்கு முன்பாக அடையாளப் பேரணியொன்றில் ஈடுபட்டது.
பின்னர் அமைச்சின் செயலாளரை சந்தித்து பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.