மத்திய பெய்ரூட்டில் சனிக்கிழாமை (23) அன்று இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் குழுவான ஹிஸ்பொல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக, இஸ்ரேலிய ஏவுகணைகள் பெய்ரூட்டின் மையத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தரைமட்டமாக்கியதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பெய்ரூட் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 66 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தன்னார்வலர்களும் மீட்புக் குழுவினரும் கனரக வாகனங்களை பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் தேடும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
லெபனானின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கசா மீதான போர் தொடங்கியதில் இருந்து லெபனானில் கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 3,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 15,413 பேர் காயமடைந்துள்ளனர்.
மோதலினால் சுமார் 1.2 மில்லியன் மக்கள் அல்லது லெபனானின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலிய தரப்பில், சுமார் 90 வீரர்களும், சுமார் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.